விருதுநகரில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்
விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நகரில் குப்பை அகற்றும் பணிகள் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.
விருதுநகர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நகரில் குப்பை அகற்றும் பணிகள் வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.
விருதுநகர் நகராட்சியில் கடந்த 10-ஆண்டுகளாக ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு பதிலாக புதிய நியமனம் செய்யப்படாமலே உள்ளது. அதனால், துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதைச் சமாளிக்கும் வகையில் ஏற்கனவே உள்ள தொழிலாளர்களுக்கு உதவியாக மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் தாற்காலிகமாக துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தேவையான உபகரணங்கள் நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படாமல் வேலை வாங்கி வருகின்றனர். குறிப்பாக கழிவு நீர் அடைப்பை சரிசெய்யும் போதும், குப்பைகளை அள்ளிப் போடும் போதும் திடீர் ஆபத்துக்களில் சிக்கிக் கொள்கிற நிலையில் உள்ளனர்.
இதேபோல், சிவகாமிபுரம் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் மகளிர் குழுவைச் சேர்ந்த தாற்காலிக பணியாளர் அமிர்தம்(47) என்பவரை பாம்பு கடித்ததது. தற்போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இவருக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரையி்ல சிகிச்சை அளிப்பதற்கு எந்தவிதமான உதவியும் செய்யவில்லை. அதோடு, துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான சாதனங்களையும் உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளாமல் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நகரில் பல்வேறு பகுதிகளில் துப்புரவு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
Advertisement