முகப்பு
தற்போதைய செய்திகள்

சேர்வலாறு, அடவிநயினார் அணைகள் நீர்மட்டம் உயர்வு: மணிமுத்தாறு அணை மூடல்

 மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடியும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 5 அடியும் உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. அருவியில் வெள்ளம் குளிக்க தடை விதிக்கப்பட்டு்ள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:47 PM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 3 அடியும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 5 அடியும் உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. அருவியில் வெள்ளம் குளிக்க தடை விதிக்கப்பட்டு்ள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் களக்காடு, தென்காசி, செங்கோட்டை உள்பட பல்வேறு இடங்களில் விடிய விடிய இடியுடன் பலத்த மழை பெய்தது.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 46 மி.மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 99 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 41 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 28.6 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 12.6 மி.மீ மழையும், ராமநதி அணையில் 2 மி.மீ மழையும், கருப்பாநதி அணையில் 35 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 12 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 75 மி.மீ மழையும், வடக்குபச்சையாறு அணையில் 62.4 மி.மீ மழையும், நம்பியாறு அணையில் 10 மி.மீ மழையும், கொடுமுடியாறு அணையில் 50 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது.

இது தவிர அம்பாசமுத்திரத்தில் 56.2 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 52 மி.மீ மழையும், களக்காட்டில் 62.4 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 7 மி.மீ மழையும், தென்காசியில் 16.1 மி.மீ மழையும், செங்கோட்டையில் 19 மி.மீ மழையும், ஆய்க்குடியில் 10.6 மி.மீ மழையும் பெய்துள்ளது.

அணைகளின் நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 91.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1549.40 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் 3 அடி உயர்ந்து 104.10 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 66.95 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 254 கனஅடி நீர்வரத்து இருந்தது.

கடனாநதி அணையில் நீர்மட்டம் 1.40 அடி உயர்ந்து, 57.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 114.83 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 45 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ராமநதி அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 59.50 அடியாக இருந்தது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2 நாளில் 10 அடி உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 47.57 அடியாக இருந்தது.

மணிமுத்தாறு அணை வியாழக்கிழமை இரவு மூடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை இருப்பதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →