முகப்பு
தற்போதைய செய்திகள்

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் தென்கிழக்கே சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, சனிக்கிழமை நாகை அருகே கரையை கடக்கும், அப்போது கடலூர் மாவட்டத்தில்

Updated On : 15 நவம்பர், 2013 at 5:41 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:17 AM

காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடக்கும்போது பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை(நவம்பர் 16) விடுமுறை விடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் தென்கிழக்கே சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, சனிக்கிழமை நாகை அருகே கரையை கடக்கும், அப்போது கடலூர் மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.