முகப்பு
தற்போதைய செய்திகள்

போலி ஆவணம் தயாரித்த பெட்ரோல் பங்கிற்கு சீல்: 9 பேர் மீது வழக்கு

போலி ஆவணம் தயாரித்து மாவட்ட ஆட்சியர் மூலம் கடலூர் மாவட்டம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:50 PM
பகிர்:

போலி ஆவணம் தயாரித்து மாவட்ட ஆட்சியர் மூலம் கடலூர் மாவட்டம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு போலி ஆவணம் தயாரித்த 9 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அகரம் பகுதியில் ரயில்வேகேட் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமாருக்கு பசுமை தீர்ப்பாயத்திலிருந்து மேற்கண்ட பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்குமாறு ஃபேக்ஸ் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் மூலம் மேற்கண்ட பெட்ரோல் பங்கிற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் புதுதில்லி பசுமை தீர்ப்பாயத்திற்கு தொடர்பு கொண்டும், இணையதளம் மூலம் விபரங்களை கேட்டபோது, அதுபோன்று எந்த உத்தரவும் பசுமை தீர்ப்பாயம் வழங்கவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் எம்.வசந்தஜோதி கடலூர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தெரிவித்த போதுதான், ஆட்சியருக்கு வந்தது போலீயான ஆவணம் என தெரியவந்தது. இதனையடுத்து பெட்ரோல் பங்கிற்கு வைக்கப்பட்ட சீல் விலக்கி கொள்ளப்பட்டது.

ஆட்சியர் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீஸார் போலி ஆவணம் தயாரித்த டி.முருகேசன், அவரது மனைவி ஆதிலட்சுமி, கே.சுந்தரராஜன், சரண்ராஜ், எஸ்.ராஜா, செல்வம், பிரகாஷ், டி.மதன், பி.யுவராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.