முகப்பு
தற்போதைய செய்திகள்

லஞ்சம் வாங்கிய தனி வட்டாட்சியர் கைது

பென்னாகரம் அருகே பூதிப்பட்டியைச் சேர்ந்தவர் ராணி. இவரது மகன் பரமசிவம் கடந்த சில மாதங்களுக்கு முன் மின் சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.உயிரிழந்த பரமசிவத்தின் குடும்பத்திற்கு அரசு ரூ.ஒரு லட்சத்து 2500

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:51 PM
பகிர்:

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய தனி வட்டாட்சியர் செவ்வாய்க்கிழமை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பென்னாகரம் அருகே பூதிப்பட்டியைச் சேர்ந்தவர் ராணி. இவரது மகன் பரமசிவம் கடந்த சில மாதங்களுக்கு முன் மின் சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.உயிரிழந்த பரமசிவத்தின் குடும்பத்திற்கு அரசு ரூ.ஒரு லட்சத்து 2500 நிவாரண உதவித்தொகை வழங்க உத்தரவிட்டது.இந்த நிவாரணத் தொகை பெற ராணி, அரசு உதவித்தொகை வழங்கும் பென்னாகரம் தனி வட்டாட்சியர் மணிமேகலையை அணுகியுள்ளார்.

அப்போது, நிவாரணத் தொகை பெற ரூ.20 ஆயிரம் லஞ்சமாக அவர் கேட்டாராம். அப்போது, முன் தவணையாக ராணி ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளார்.இதையடுத்து, நிவாரணத் தொகை பயனாளிக்கு காசோலை வழங்க உள்ளதால், ராணியின் குடும்ப அட்டை மற்றும் உழவர் அட்டை ஆகியவற்றை தனி வட்டாட்சியர் மணிமேகலை வாங்கி வைத்துக்கொண்டு மேலும், ரூ.10 ஆயிரத்தை தர வேண்டும் என்றாராம்.இது குறித்து ராணி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

தகவலின் பேரில் போலீஸார், ரசாயனம் தடவிய ரூ.7 ஆயிரத்தை ராணியிடம் கொடுத்து, தனி வட்டாட்சியரிடம் அளிக்கும் படி கூறியுள்ளனர்.அதன் படி, ராணி ரூ.7 ஆயிரத்தை தனி வட்டாட்சியருக்கு வழங்கியுள்ளார். அதனை அவர் பெரும்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு டிஎஸ்பி காதர் தலைமையிலான போலீஸார், தனி வட்டாட்சியர் மணிமேகலையை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து உழவர் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →