தற்போதைய செய்திகள்

மதுரை: சிறை வார்டன் சஸ்பெண்ட்

மதுரை சிறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைதிகளிடையே மோதல் ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. தண்டனைக் கைதிகள் சிலர் விசாரணைக் கைதிகளை மிரட்டி, அவர்களது சாப்பாடு உள்ளிட்டவற்றை

ஜெயப்பாண்டி

மதுரை மத்திய சிறையின் மூத்த வார்டன் செவ்வாய்க்கிழமை தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை சிறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைதிகளிடையே மோதல் ஏற்பட்டதாகப் புகார் எழுந்தது. தண்டனைக் கைதிகள் சிலர் விசாரணைக் கைதிகளை மிரட்டி, அவர்களது சாப்பாடு உள்ளிட்டவற்றை அபகரித்துக்கொள்வதாகப் புகார்களும் எழுந்தன. கைதிகளுக்கு இடையேயான மோதலில் காயமடைந்த கைதிகள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றனர்.

இந்தநிலையில், தண்டனைப் பிரிவில் நாகராஜன் எனும் கைதி குடிநீர் குழாய்களை எடுத்து மற்ற கைதிகளைத் தாக்கவந்ததாகவும், இதை அப்பிரிவின் பொறுப்பாளரான மூத்த வார்டன் ராஜன்பாபு ஜெயராஜிடம் கைதிகள் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை எனப்புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிறை கண்காணிப்பாளர் ரா.அறிவுடைநம்பி விசாரணை நடத்தினார். அதனடிப்படையில் ராஜன்பாபு ஜெயராஜ் தாற்காலிகப்பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT