டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும்: பாஜக
டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், மற்றவர்களுக்கு 35 ஆகவும் உள்ளது. குரூப் 1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவதில்லை. கடந்த
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை 50 வரை உயர்த்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், மற்றவர்களுக்கு 35 ஆகவும் உள்ளது. குரூப் 1 தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவதில்லை. கடந்த 13 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே இந்தத் தேர்வு நடந்துள்ளது. எனவே, வயது மூப்பின் காரணமாக கிராமப்புற ஏழை மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Advertisement
குஜராத்தில் குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவு ஆண்களுக்கு 40 ஆகவும், பெண்களுக்கு 45 ஆகவும், மற்றவர்களில் ஆண்களுக்கு 45 ஆகவும், பெண்களுக்கு 50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதுபோல தமிழகத்திலும் வயது வரம்பை உயர்த்தி கிராமப்புற ஏழை மாணவர்கள் தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.