தற்போதைய செய்திகள்

கடித்த பாம்பை அடித்து தூக்குச் சட்டியில் போட்டு மருத்துவமனை எடுத்து வந்த பெண்ணால் பரபரப்பு

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கொசவப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி மகாலிங்கத்தின் மனைவி தாமரைச்செல்வி இன்று காலை கடலை பறிக்க வயலுக்குச் சென்றார். அப்போது, கழுதைவீரியன் பாம்பு அவரைக்

ஜெயப்பாண்டி

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கொசவப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி மகாலிங்கத்தின் மனைவி தாமரைச்செல்வி இன்று காலை கடலை பறிக்க வயலுக்குச் சென்றார். அப்போது, கழுதைவீரியன் பாம்பு அவரைக் கடித்தது. வலியால் துடித்த அவர், அருகே இருந்த அவரது சகோதரரைக் கூவி அழைத்தார். அவர், ஒரு அடி நீளமுள்ள அந்தப் பாபை அடித்துப் போட்டார். உடனே தாமரைச் செல்வி அந்தப் பாம்பை எடுத்து சாப்பாட்டுத் தூக்கில் போட்டுக்கொண்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்.

மருத்துவமனைக்கு ஓடோடி வந்த அவர், மருத்துவர்கள் முன் தூக்குச் சட்டியைத் திறந்து பாம்பை கீழே போட்டார். அதைக் கண்டு மருத்துவர்களும் சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் அலறினர். பின்னர், தாமரைச் செல்விக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

அந்தப் பாம்பு இறந்துவிட்டது என்றாலும், இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறும் போது பாம்பு கடித்தவர்களுக்கு கடித்த பாம்பின் வகை எது என்று தெரிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே பாம்பின் வகை எது என்று தெரிந்து தாமதப்படுத்தாமல் வந்தால் போதும். பாம்பை எல்லாம் அடித்துப் போட்டு கையோடு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றனர்.

இது போன்ற நிகழ்வுகள் மதுரை மருத்துவமனையில் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்க்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு

விரோஷ்! திருமணத்திற்கு பெயரிட்ட விஜய் தேவரகொண்டா!

SCROLL FOR NEXT