உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக எம்.எல்.ஏ. வீடு தாக்கப்பட்ட வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் மகேஸ்வரி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், சேலம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனர்.
கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் வீரபாண்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வத்தின் வீடு கற்கள் வீசி தாக்கப்பட்டது. இது குறித்து விசாரித்த கொண்டலாம்பட்டி போலீஸார், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகள் மகேஸ்வரி, தம்பி மகன் உமா சங்கர், இவரது மனைவி இந்திராணி, பாரப்பட்டி குமார், சோலைகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சேலம் போலீஸார் கைது செய்யாமல் இருக்க அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த நிலையில் மகேஸ்வரி, உமாசங்கர், இந்திராணி, குமார் ஆகியோர் சேலம் 5-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
குமார், உமாசங்கர் ஆகியோர் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் 3 வாரங்களுக்கு தினசரி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.