முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு பஸ் மீது கண்ணாடி உடைப்பு: 40 பேர் மீது வழக்கு

சிதம்பரம் அருகே உள்ள நெடுஞ்சேரி புத்தூர் மணலூரைச் சேர்ந்த சண்முகம். இவர் சனிக்கிழமை விருத்தாசலத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் அரசு பஸ்ஸில் வந்துள்ளார். அப்போது நடத்துநர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:56 PM
பகிர்:

சிதம்பரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்தது தொடர்பாக 40 பேர் மீது புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் அருகே உள்ள நெடுஞ்சேரி புத்தூர் மணலூரைச் சேர்ந்த சண்முகம். இவர் சனிக்கிழமை விருத்தாசலத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் அரசு பஸ்ஸில் வந்துள்ளார். அப்போது நடத்துநர் சண்முகத்திடம் டிக்கட் வாங்குமாறு கூறினார். அதற்கு அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சண்முகத்தை நெடுஞ்சேரி புத்தூரில் நடத்துநர் இறக்கிவிட்டு சென்றுவிட்டு சென்று விட்டார். இதனையடுத்து சண்முகம் தனது ஊருக்கு சென்று ஆதரவாளர்கள் 40 பேருடன் சனிக்கிழமை இரவு வந்த அதே பேருந்தை வழிமறித்து தகராறு செய்து பஸ்ஸின் பின்புற கண்ணாடியை உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உதவிப் பொறியாளர் அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் புத்தூர் போலீஸார் சண்முகம் உள்ளிட்ட 40 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.