முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கை கடற்படையினர்  ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிப்பு

ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக் கிழமை காலையில் 700 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். தலைமன்னார், தனுஸ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:56 PM
பகிர்:

ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர்  மீனபிடிக்கவிடாமல் நடுக்கடலில் வைத்து விரட்டியடித்துள்ளனர்.உயிருக்கு பயந்த மீனவர்கள் பல லட்சம் ரூபாய் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

ராமேசுவரம் பகுதியிலிருந்து சனிக் கிழமை காலையில் 700 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். தலைமன்னார், தனுஸ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது  அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 150க்கு மேற்பட்ட படகுகளை விரட்டியுள்ளனர். பாதி அளவில் மீன்பிடித்ததோடு பல லட்சம் ரூபாய் நஷ்டத்தோடு உயிர் பிழைத்தால் போதும் என ஞாயிற்றுகிழைமை காலையில் ராமேசுவரம் வந்தனர்.இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை மீன்பிடிக்கவிடாமல்  தாக்குவது,மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்துவது,போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இந்நிலையில் ஒரு விசைப்படகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றால் குறைந்த பட்சம் 30 ஆயிரம ரூபாய் வரை செலவீணம் ஆகும். செலவின் மதிப்பை விட கூடுதலான மீன்பிடித்து வந்தால் மட்டுமே நஷ்டம் ஏற்படாமல் குறைந்த அளவு லாபத்தோடு தினசரி தொழில் செய்து வர முடியும் என்ற சூழ்நிலைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக  இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலால்  ராமேசுவரம் மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் பெறும் சிரம்மமான சுழ்நிலைகள் ஏற்ப்பட்டுள்ளனர்.       

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments