சிதம்பரத்தில் ஆறுமுகநாவலர் குருபூஜை விழா!
சிதம்பரத்தில் ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை சார்பில் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர் 134-வது ஆண்டு குருபூஜை விழா திங்கள்கிழமை வெகு சிறப்பாக
சிதம்பரத்தில் ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை சார்பில் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுகநாவலர் 134-வது ஆண்டு குருபூஜை விழா திங்கள்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
சிவத்தொண்டர்களாகிய அறுபத்துமூவரின் திருவரலாற்றை சேக்கிழார் பெருமான் செய்யுள் வடிவில் திருத்தொண்டர் புராணமெனும் பெரியபுராணம் மூலம் உலகறியச் செய்துள்ளார். அப்புராணத்தை அனைவரும் படித்து உணரும் வகையில் 1952-ல் உரை நடை வடிவில் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து சிதம்பரத்திற்கு வந்த ஆறுமுகநாவலர் தொகுத்து வெளியிட்டுள்ளார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்காளாக கொண்டு அரும்பணியாற்றியவர் ஆறுமுகநாலலர் பெருமான். இவர் சேக்கிழார் பெருமானிடம் பெரிதும் பக்தி கொண்டு திகழ்ந்தவர். நாவலர், சிதம்பரத்தில் சேக்கிழார் பெருமானுக்கு கோயில் எழுப்பி சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்
அச்சிறப்பு வாய்ந்த ஆறுமுக நாவலருக்கு சிதம்பரம் ஞானப்பிரகாசர் வடக்குத்தெருவில் உள்ள சேக்கிழார் கோயிலில் குருபூஜை விநாயகர் வழிபாட்டுடன் தொடங்கியது.பின்னர் ஆறுமுக நாவலருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் மேலவீதி ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளியில் திருவுருவ வழிபாடு நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அறக்கட்டளை அறங்காவலரும், பள்ளிக்குழுத் தலைவருமான டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தமிழாசிரியர் கே.சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார்.