முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே வேளாண் அலுவலகம் முன்பு விவசாயிகள் மறியல்: 110 பேர் கைது

காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி வேளாண்மை அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மறியலில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:57 PM
பகிர்:

காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி வேளாண்மை அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 110 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழகஅரசே காப்பீடு தொகையை செலுத்தியது. இதில் 50 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும், 50 சதவீதத்திற்கு கீழ் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயீர் காப்பாடு மூலம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 1109 ஹெக்டேர் நிலங்களுக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் வீதம் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி பகுதிக்கு ரூ.4 லட்சம் குறைவான தொகையை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமையில் கென்னடி, மதிவாணன், அன்பழகன், லட்சுமிகாந்தன் ஆகியோர் முன்னிலையில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குமராட்சி கடைவீதியிலிருந்து ஊர்வலமாக சென்று வேளாண்மை அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 110 பேரை குமராட்சி போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.