மதுரையில் கடத்தப்பட்ட மாணவர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். 4 பேர் தப்பி ஓடினர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை மதுரை தபால் தந்தி நகர் நட்சத்திர நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்.இவரது மகன் ரோஹித் 7ம் வகுப்பு படித்து வந்தார்.இன்று மாலை 4.30 மணி அளவில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். மாணவர் கடத்தபட்ட நிலையில் மாணவன் ரோஹித் பொற்றோர்களிடம் மர்ம நபர் பேசிய தகவலையடுத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே கீரனூரில் அந்த மாணவர் மீட்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.