அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்
கடையநல்லூர் சம்பா ஊருணி அருகே அனுமதியின்றி மணல் எடுத்துவரப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர்
கடையநல்லூர் அருகே திங்கள்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கடையநல்லூர் சம்பா ஊருணி அருகே அனுமதியின்றி மணல் எடுத்துவரப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடையநல்லூர் வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் ஆரிப் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.