தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் மீன் பண்ணை அமைக்க விரும்புகிறவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில் மண் குட்டைகளில் மீன் பண்ணை அமைப்பதற்கு விருப்பம் உள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் சார்பில் மண் குட்டைகளில் மீன் பண்ணை அமைப்பதற்கு விருப்பம் உள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இது குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இம்மாவட்டத்தில் நீர்வள நிலவளத்திட்டம் மூலம் மண் குட்டையில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு பண்ணை அமைக்கும் திட்டம் அர்ஜூனா உப வடிநீர் நிலத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.2.55 லட்சத்தில் கட்டுமானம் மற்றும் ரூ.0.45 லட்சம் உள்ளீட்டு செலவினத்திற்காகவும் வழங்கப்பட இருக்கிறது. இப்பணியை மேற்கொள்ள பயனாளியிடம் 1.50 ஏக்கர் சொந்த நிலமும், போதுமான நீர்வசதியுடன் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுடன் மின்வசதியும் இருக்க வேண்டும்.

எனவே ஆர்வமுள்ள விவசாயிகள் மீன்வள உதவி இயக்குநர், விருதுநகர் அலுவலகத்தை நில ஆவணங்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை விலையி்ல்லாமல் பெற்று பயன் பெறலாம். மேலும், இது தொடர்பாக மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், 286, இராஜமணி ஹால், பழைய அருப்புக்கோட்டை சாலை, விருதுநகர்-626001 மற்றும் தொலைபேசி எண்:04562-244707 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT