நர்சை சுட்டு நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது
தூத்துக்குடி செல்சினிகாலனியைச் சேர்ந்த சிவானந்தன் மனைவி சுசீலா (38). அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த 31-ம் தேதி சுசீலா வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி
தூத்துக்குடியில் செவிலியரை துப்பாக்கியால் சுட்டு நகையை பறித்துச் சென்ற வழக்கில் இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
தூத்துக்குடி செல்சினிகாலனியைச் சேர்ந்த சிவானந்தன் மனைவி சுசீலா (38). அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த 31-ம் தேதி சுசீலா வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி நுழைந்த மூவர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிóட்டு 12 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.
காயமடைந்த சுசீலா தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த தென்பாகம் போலீஸார் நாகர்கோவில் அருகேயுள்ள அருமனையைச் சேர்ந்த வினீஷ் (22) என்பவரை புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
சசீலாவின் வீட்டின் அருகே தங்கியிருந்து மெக்கானிக் வேலைபார்த்து வந்த வினீஷ் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து சுசீலாவை துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். கைதான வினீஷ் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன என போலீஸார் தெரிவித்தனர்.