மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தெப்பக்குளத்தில் தவறிவிழுந்து பலி
விருதுநகர் சிவன்கோவில் தெப்பம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் மகேஸ்வரி(31). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் குடியிருப்பருகே உள்ள சிவன்கோயில் தெப்பம் பகுதியில் அடிக்கடி
விருதுநகர் சிவன்கோவில் தெப்பம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் மகேஸ்வரி(31). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் குடியிருப்பருகே உள்ள சிவன்கோயில் தெப்பம் பகுதியில் அடிக்கடி சுற்றிக் கொண்டிருப்பாராம். இதேபோல், புதன்கிழமை மாலையிலும் இக்கோயில் தெப்பம் பகுதியில் உள்ள சுற்றுச் சுவரில் ஏறி அமர முயற்சித்துள்ளார். அப்போது, கால் தடுக்கி தெப்பக்குளத்தில் விழுந்து மூழ்கியுள்ளார். உடனே அப்பகுதியில் உள்ள சாமி வழிபாடு செய்ய வந்தவர்கள் உள்ளே இறங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு அரசு மருத்துவமனைக்குச் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது பாட்டியம்மா முத்துலட்சுமி பஜார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.