முகப்பு
தற்போதைய செய்திகள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காட்டுமன்னார்கோயில் ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட இருவர் தற்காலிக நீக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோயில் கிழக்கு ஒன்றியச் செயலாளர் க.செ.பன்னீர்செல்வம், பேரூர் செயலாளர் சி.மலையப்பன் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:00 PM
பகிர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோயில் கிழக்கு ஒன்றியச் செயலாளர் க.செ.பன்னீர்செல்வம், பேரூர் செயலாளர் சி.மலையப்பன் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என கடலூர் மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பு: தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரையும், கட்சி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையிலும், கட்சி நற்பெயரை கெடுக்கும் வகையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மேற்கண்ட இருவரையும் கட்சி பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ஒராண்டிற்கு தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறது. கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்தும் நபர்கள் குறித்து தலைமையகத்திற்கு தகவல் அனுப்பத்தவறிய ஒன்றிய அமைப்பாளர் ச.செந்தில்குமார் விளக்கம் கோரி அனுப்பப்பட்டுள்ள கடிதம் கிடைக்கப் பெற்ற 10 தினங்களுக்குள் பதில்ம் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 6 மாதத்திற்கு கட்சி பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என வ.க.செல்லப்பன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments