விருதுநகர் அருகே டிராக்டர் மோதி இளைஞர் சாவு
விருதுநகர் அருகே சூலக்கரையைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் பொன்னுப்பாண்டியராஜா(33). இவர் புதன்கிழமை சூலக்கரையிலிருந்து-தாதம்பட்டி சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு சைக்கிளில் சென்றாராம்
விருதுநகர் அருகே சூலக்கரையைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் பொன்னுப்பாண்டியராஜா(33). இவர் புதன்கிழமை சூலக்கரையிலிருந்து-தாதம்பட்டி சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு சைக்கிளில் சென்றாராம். அப்போது, இதே பகுதியைச் சேர்ந்த சிவராம் என்பவர் விருதுநகர் நோக்கி டிராக்டரில் சென்றாராம். அப்போது, அந்த வழியாக சைக்கிளில் வந்தவர் மீது டிராக்டர் எதிர்பாரத விதமாக மோதியது. இதில், பொன்னுப்பாண்டிராஜா சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது சகோதரர் குமரன் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சிவராம் மீது வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்