முதலமைச்சர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி மதுரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கத்தில் டிச.2ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 15-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அந்தந்த மாவட்ட விளையாட்டு மைதானங்களில் வைத்து கடந்த வாரம் நடைபெற்றது. இதையடுத்து, மண்டல அளவிலான போட்டி குறிப்பிட்ட நாளில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இவர்களுக்காக ஒவ்வொரு நாளும் நடத்தப்பட இருக்கிற போட்டியின் விவரம வருமாறு: டிச.2-ம் தேதி வளைகோல்பந்து போட்டி நடைபெற இருக்கிறது. அதேபோல், வருகிற 2,3 மற்றும் 4 ஆகிய நாள்களில் கால்பந்து போட்டியும், 4-ம் தேதி நீச்சல் போட்டியும், 5,6,7 நாள்களில் கூடைப்பந்து, டென்னிஸ் ஆகிய போட்டியும், 8,9,10 ஆகிய நாள்களில் கபாடி, பேட்மின்டன் ஆகிய போட்டியும், 11,12, மற்றும் 13 ஆகிய நாள்களில் கையுந்து போட்டியும், 14,15 ஆகிய நாள்களில் தடகளப் போட்டியும் நடைபெற இருக்கிறது.
இப்போட்டிகளில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 204 பேர் வரையில் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதில், ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்று வெற்றி பெறும் வீரர், வீராங்கனை ஆகியோருக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் மற்றும் 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. இந்த மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுகிறவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பதற்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.