தற்போதைய செய்திகள்

கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்: போலீஸ் தடியடி

நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில் படித்த மாணவர் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நகரின் முக்கிய

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில் படித்த மாணவர் உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவத்தில் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நகரின் முக்கிய சாலைகளை மறித்து மறியலில் ஈடுபட்ட சக மாணவர்களை போலீஸôர் தடியடி நடத்தி கலைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொனசேரி அருகே சூரியகோடு பகுதியைச் சேர்ந்த பாலையன் என்பவரின் மகன் சரண்ராஜ்(19). நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வந்தார். அதே கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த இவருக்கு திங்கள்கிழமை மதியம் முதல் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இரவு 11.30 மணியளவில் உடல் நிலை மேலும் மோசமானதை அடுத்து உடன் தங்கியிருந்த மாணவர்கள், விடுதி காப்பாளர் சேகரிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, வேன் வரவழைக்கப்பட்டு நாமக்கல் மோகனூர் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தீவிர சிகிóச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்த சரண்ராஜ், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவத்தை அறிந்த அக்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே முக்கிய சாலைகளை மறித்து காலை 9.30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர். மாணவன் சரண்ராஜை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கல்லூரி நிர்வாகம் உரிய நேரத்தில் வேன் அனுப்பாததே அவர் சாவுக்கு காரணம் என்றும், கல்லூரி நிர்வாகம் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். காலைநேரத்தில் நடந்த இம்மறியலால் பெருமளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போலீஸôர், மாணவர்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர். எனினும், ஆட்சியர் வராமல் மறியலை கைவிடுவதில்லை என்று மாணவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் தலைமையில் அங்குவந்த அதிரடிப்படையினர் மறியலில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தி கலைத்தனர். அப்போது சிதறி ஓடிய மாணவர்கள் சிலரை பிடித்து போலீஸôர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஓரிரு மணி நேரத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்ட அம்மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை கோரி சார்ஆட்சியர் அஜய்யாதவ்விடம் மனு அளித்தனர். தொடர்ந்து, சரண்ராஜின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் நாமக்கல்லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT