ஸ்ரீவிலி.யில் வருவாய் ஆய்வாளரை டிராக்டர் ஏற்றி கொலை செய்ய முயற்சி: ஒருவர் மீது வழக்கு
அதனை ஓட்டி வந்த தங்கமாரி, அதிவேகமாக டிராக்டரை ஓட்டி, காளிதாஸை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் திருடி வந்த டிராக்டரை நிறுத்த முயன்ற வருவாய் ஆய்வாளரை டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
மல்லி வருவாய் ஆய்வாளர் காளிதாஸ் (45), திருவண்ணாமலை நடைபாதை ஓடை மயானம் அருகே தனது குழுவினருடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்த வருவாய் ஆய்வாளர் காளிதாஸ் முற்பட்டுள்ளார். அதனை ஓட்டி வந்த தங்கமாரி, அதிவேகமாக டிராக்டரை ஓட்டி, காளிதாஸை ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக அவர் சற்று ஒதுங்கிக் கொண்டதால் உயிர் பிழைத்தார். இது குறித்து காளிதாஸ், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கமாரியையும், டிராக்டரையும் தேடி வருகிறார்கள்.
Advertisement