முகப்பு
தற்போதைய செய்திகள்

கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

காலை கும்ப ஜெபம், கும்ப பூஜை மற்றும் கும்ப அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பழவகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு மகா அபிஷேகம்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை ஒட்டி  சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

காலை கும்ப ஜெபம், கும்ப பூஜை மற்றும் கும்ப அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பழவகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.பிற்பகல் அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராதாகிருஷ்ணன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், சிவகுமார், மீனாபட்டாச்சாரியா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.புரட்டாசி சனியையொட்டி, காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோவில் வளாகத்தையும் தாண்டி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று தரிசனம் செய்தனர். கடையநல்லூர் காவல் ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் சிவன் உள்ளிட்ட போலீஸôர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →