முகப்பு
தற்போதைய செய்திகள்

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள் விடுதலை

கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கடந்த வாரம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு படகு உள்பட 20 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது.இதையடுத்து அவர்கள் கடற்படை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களின் காவலை அக்டோபர் 21-ம் தேதி வரை நீட்டித்து  நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கொழும்பு கடற்படை தளபதி வலியுறுத்தினார்.இதனையடுத்து மீனவர்கள் 20 பேரும் இன்று பிற்பகல் மீண்டும்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது4 படகுகள் உள்பட  20 மீனவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி ஆனந்தி கனகரத்னம் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஓரிரு நாள்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments