தற்போதைய செய்திகள்

பி.எஸ்.என்.எல் சார்பில் 3ஜி டேட்டா ரீசார்ஜ்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக வழங்கும் திட்டம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 14-வது ஆண்டு தொடக்க தினத்தை மற்றும் தீபாவளி விழாச் சலுகையாக 1.10.2013 முதல் ரூ.96 மற்றும் அதற்கும் மேலுள்ள 3ஜி டேட்டா ரீசார்ஜ்களுக்கு 10 சதவீதம் கூடுதல்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சார்பில் 3ஜி டேட்டா ரீசார்ஜ்களுக்கு 10 சதவீதம் கூடுதலாகவும், 3ஜி டேட்டா கார்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இது குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் பொதுமேலாளர்(பொறுப்பு) ராஜம்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 14-வது ஆண்டு தொடக்க தினத்தை மற்றும் தீபாவளி விழாச் சலுகையாக 1.10.2013 முதல் ரூ.96 மற்றும் அதற்கும் மேலுள்ள 3ஜி டேட்டா ரீசார்ஜ்களுக்கு 10 சதவீதம் கூடுதல் டேட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் புதிய சலுகை திட்டத்தில் குறிப்பிட்ட ஒரு வருட உபயோக டேட்டா ரீசார்ஜ்களில் ரூ.1251-க்கு 9 ஜி.பி டேட்டாவும், ரூ.2299-க்கு 18 ஜீ.பி டேட்டா மற்றும் சலுகை விலையில் டேட்டா கார்டும், ரூ.3299-க்கு 30 ஜீ.பியும் மற்றும் 3ஜி டேட்டா கார்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.

அதேபோல், வருடாந்திர வாடகை திட்டத்தில் உள்ள அனைத்து அகன்ற அலைவரிசை வாடிக்கையாளர்கள் ரூ.600 மற்றும் அதற்கும் மேல் மாத வாடகைத் திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் சலுகை விலையில் 3 ஜி டேட்டா கார்டு வழங்கப்படுகிறது. அதோடு, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் விழாக்கால சலுகையாக இலவச சிம்கா்டு, டாப்-அப் ரூ.100 முதல் முழு டாக் வேல்யு மேலும் டாப்-அப் ரூ.6 ஆயிரத்திற்கு, கூடுதலாக ரூ.7200 டாக் வேல்யு கிடைக்கும். மேலும், இது தொடர்பாக நிறுவனத்தின் சேவைகள் மற்றும் கட்டணத் திட்டம் பற்றிய முழு விவரத்தை இணைய தள முகவரியான www.tamilnadu.bsnl.co.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல் பொது மேலாளர்(பொறுப்பு) ராஜம் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT