களக்காடு அருகே கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக தேமுதிக பிரமுகரை திருக்குறுங்குடி போலீஸார் கைது செய்தனர்.
களக்காடு அருகேயுள்ள நடுச்சாலைப்புதூரைச் சேர்ந்த புதுபெருமாள் மகன் மணிதுரை (50). சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். இவர் மாவடி ராமச்சந்திரபுரத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் இளையபெருமாள் (47) என்பவரிடம் கடந்த 18.01.2012.ல் ரூ.50 ஆயிரம் கடன் கேட்டாராம். இதன்படி, மணிதுரையிடம் புரோநோட்டில் கையெழுத்து பெற்றுக்கொண்ட இளையபெருமாள் ரூ.47 ஆயிரத்தைக் கொடுத்ததுடன், மணிதுரையிடம் இருந்து மாதம்தோறும் ரூ.2 ஆயிரத்தை வட்டியாக பெற்றுக் கொண்டாராம்.
இந்நிலையில், கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து தனக்கு ரூ.80 ஆயிரம் தர வேண்டும் என்றுகூறி மணிதுரையிடம் இளையபெருமாள் மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து, இளையபெருமாள் தன்னிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக மணிதுரை திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் இளையபெருமாளை திங்கள்கிழமை கைது செய்தனர். இளையபெருமாள் தேமுதிக.வின் முன்னாள் களக்காடு ஒன்றிய செயலாளர் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.