விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு குறித்து கிராமங்களில் சுகாதார துறை மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும், முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர்.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் மழைக்காலம் தொடங்குவதை அடுத்து சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் டெங்கு பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில், பொதுமக்களுக்கு விநியோகிக்கும் குடிநீர் மேல் தொட்டிகளை குளோரினேசன் செய்து கொடுக்கவும், தெருக்களில் கழிவு நீர் வாய்க்காலில் தண்ணீர் தேங்காத வகையில் அகற்றவும் வேண்டும். கிராமங்களில் ஒவ்வொரு குடியிருப்புகளிலும் தண்ணீர் சேகரிக்கும் உபகரணங்களை கொசுக்கள் புகாத வகையில் மூடிவைக்க வேண்டும். பழைய டயர்களை அக்றறவும், பிளாஸ்டிக் பொருள்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவைகளை இல்லாத வகையில் துப்புரவாக வைத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே இது தொடர்பாக அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில், கிராமங்களைச் சுகாதாரமாக வைத்துக் கொள்ளும் வகையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொசுக்களை ஒழிப்பதற்கு பணியாளர்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள ஆராம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என மாவட்ட துணை சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர்.சண்முகசுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.