முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் : சேதமுற்ற சத்துணவுக் கூட கட்டடம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தச்சகுடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவுக் கூடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய சத்துணவுக் கூடம் கட்டித் தர அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 9 அக்டோபர், 2013 at 2:39 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தச்சகுடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவுக் கூடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாணவ மாணவியர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய சத்துணவுக் கூடம் கட்டித் தர அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தச்சகுடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவுக் கூடம் உள்ளது. இங்கு 15 மாணவர்களும் 12 மாணவிகளும் சத்துணவு சாப்பிடுகிறார்கள். இந்த சமையல் கூடம் மிகவும் சேதமுற்று சமையல் செய்யும் போது மேற்கூரை இடிந்து உணவுப் பொருட்களில் விழும் அவல நிலை உள்ளது. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவி ராஜகுமாரி பொன்னுச்சாமி புதன்கிழமை கூறியதாவது: பல முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்துள்ளேன். கடந்த ஆண்டு மராமத்து பணி என்று சொல்லி சில இடங்களை பூசி விட்டு சென்று விட்டார்கள். தற்போது மேற்கூரை மற்றும் சுற்றுச் சுவர் இடிந்து அவ்வப்போது விழுவதால், பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் தச்சகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய சத்துணவுக் கூடம் கட்டிக் கொடுத்து மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.