வேப்பலோடை கடல் பகுதியில் அக். 19-ல் மீன்பிடிக்க தடை
தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கடல் பகுதியில் அக்டோபர் 19-ம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்
தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கடல் பகுதியில் அக்டோபர் 19-ம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,இந்திய கடற்படையைச் சேர்ந்த குளியோடுதல் குழுவினர் அக்டோபர் 19-ம் தேதி வேப்பலோடை கடல் பகுதியில் ஆழ்கடல் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். எனவே, அன்றயை தினம் மீனவர்கள் யாரும் தூத்துக்குடிக்கு வடக்கே வேப்பலோடை பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.