தற்போதைய செய்திகள்

பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல் பிள்ளைகள் பாதுகாக்க வேண்டும்: ஆட்சியர்

வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல், பிள்ளகைள் தங்கள் பராமரிப்பில் பாதுகாக்க வேண்டும் என இளைஞர்களை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

எஸ். பாண்டியன்

வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல், பிள்ளகைள் தங்கள் பராமரிப்பில் பாதுகாக்க வேண்டும் என இளைஞர்களை ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறை, ஹெல்பேஜ் இந்தியா அமைப்பு மற்றும் முதியோர்களுக்கான கூட்டமைப்பு ஆகியவை சார்பில் சர்வதேச முதியோர் தினவிழா தனியார் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து பேசியதாவது:

முதியோர்களுக்கான முதியோர் கூட்டமைப்பு சார்பில் முதியோர்களுக்கு பயன்படும் வகையிலான கையேடு தயார் செய்து வெளியிட்டுள்ளது. இதில், முதியோர்களை பாதுகாப்பது, பராமரிப்பது, பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள், மருத்துவம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியவைகள், முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட வாழ்வாதரத்திற்கு தேவையான பல்வேறு தகவல்களை தொகுத்து அளித்துள்ளனர். இக்கையேடு முதியோர் அனைவருக்கும் பயனுள்ளவையாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்.மேலும், இன்றைய இளைஞர்கள் நாளைய முதியோர்கள் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல், தங்களின் பராமரிப்பிலே பாதுகாக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் வேண்டும். முதியோர் பராமரிப்பு சட்டம் 2007ல் இயற்றப்பட்டு, 2009ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட முதியோர்கள் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் மாவட்ட சமூக நல அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் மனுக்களை அளிக்கலாம்.

அந்த மனுக்களின் அடிப்படையில் உறவினர்களை அழைத்து விசாரணை செய்து சமரசம் செய்து வைக்கப்படும். அதேநேரத்தில் வட்டார அளவில் கண்காணிப்பு குழுக்களும் அமைத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும், பாதிக்கப்பட்ட முதியோர்கள் அனைவரும் முதியோர் இல்லங்களில் பாதுகாப்பாகவே உள்ளனர். முதியோர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிப்பதற்கு 1253 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, முதியோர்களுக்கான கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட சமூக நல அலுவலர் பாண்டியம்மாள், ஹெல்பேஜ் இந்தியாவின் புதுதில்லியின் தலைவர் ராஜேஸ்வர் தேவராகொண்டா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் யுவராணி, குடும்ப வன்முறை சட்ட பாதுகாப்பு அலுவலர் இந்திரா ஜெயசீலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக முதியோர் அமைப்பின் மாவட்ட மேலாளர் பீட்டர் ஞானசிகாமணி நன்றி கூறினார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT