முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகரில் பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 70 சவரன் நகை, பணம் திருட்டு

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 70 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On : 14 அக்டோபர், 2013 at 12:02 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:44 PM

விருதுநகர் அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 70 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.

 விருதுநகர் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் சேகர்(55). இவர் இப்பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு சொந்த வேலையின் காரணமாக அருகில் உள்ள தந்தை வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றாராம். பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டிற்கு வந்து பார்க்கையில் முன்புறம் திறந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்து தேகரும், அவரது மனைவியும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து உள்ள சென்று பார்த்துள்ளனர்.  பீரோவை கடப்பாறையால் நெம்பி உள்ளேயிருந்த 70 சவரன் நகை, 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் கணிப்பொறி அகியவைகளை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக தேகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக போலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.