முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசுப் பள்ளியில் 21 லேப்-டாப்கள் திருட்டு

சிவகங்கை-மேலூர் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு வழங்குவதற்காக, அரசு சார்பில் 292 விலையில்லா

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

சிவகங்கை, அரசுப் பள்ளி கம்ப்யூட்டர் அறையை பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான லேப்டாப்களை யாரோ திருடிச் சென்றுவிட்டதாகப் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை-மேலூர் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு வழங்குவதற்காக, அரசு சார்பில் 292 விலையில்லா லேப்டாப்கள் அனுப்பப்ட்டிருந்தது. இதில் கடந்த அக்.12 ஆம் தேதி 264 லேப்டாப்களை மாணவியருக்கு வழங்கி உள்ளனர். மீதமுள்ள 28 லேப்டாப்களை பள்ளியின் கம்ப்யூட்டர் அறையில், வைத்து பூட்டப்பட்டது. இதையறிந்த யாரோ, அறையின் கதவை உடைத்து உள்ளே இருந்த லேப்டாப்களை திருடிச் சென்றுவிட்டனராம். இது குறித்து ஞாயிற்றுக்கிழமை பள்ளி தலைமை ஆசிரியர் அய்யங்காளை கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments