முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவிழா பார்த்து வருவதாக கூறிச் சென்றவர் மரணம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவிழா பார்த்து வருவதாக கூறிச் சென்ற இளைஞர் காயங்களுடன் சாலை ஓரம் இறந்து கிடந்தார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

Updated On : 14 அக்டோபர், 2013 at 9:38 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவிழா பார்த்து வருவதாக கூறிச் சென்ற இளைஞர் காயங்களுடன் சாலை ஓரம் இறந்து கிடந்தார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள சேதுநாராயணபுரம், இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் சுப்பிரமணி (31). இவருக்கு சுந்தரம்மாள் (30) என்ற மனைவி உண்டு.

வத்திராயிருப்பில் நடைபெற்று வரும் முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழாவை பார்த்து வருவாதாக சுப்பிரமணி கூறிச் சென்றுள்ளார்.

Advertisement

இந்நிலையில் வத்திராயிருப்பு-கிருஷ்ணன்கோவில் சாலையில் ஒரு மனமகிழ் மன்றம் அருகே உடலில் பல்வேறு இடங்களில் சிராய்ப்பு காயங்களுடன் சுப்பிரமணி இறந்து கிடந்தார்.

இது குறித்து மனைவி சுந்தரம்மாள், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.