வரதட்சிணை கேட்டு துன்புறு்ததியதாக கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கூடுதல் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வத்திராயிருப்பு, கீழத் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மனைவி பாண்டியம்மாள் (26). இவருக்கும் மாலையூரணிபட்டியைச் சேர்ந்த கோட்டமலை மகன் ஈஸ்வரன் (28) என்பவருக்கும் 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது 10 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் வரதட்சிணையாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஈஸ்வரனுக்கு தனியே இரண்டு பவுனில் கை செயின், அரை பவுனில் மோதிரம் மற்றும் கைக்கடிகாரம் கொடுத்துள்ளார்கள்.
திருமணம் முடிந்த சில நாட்களில் ஈஸ்வரன் மது அருந்திவிட்டு வந்து மனைவியை துன்புறுத்தியுள்ளார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாண்டியம்மாள் புகார் செய்துள்ளார். போலீஸார் விசாரித்துள்ளனர். இனிமேல் திருந்தி வாழ்வேன் என்று ஈஸ்வரன் எழுதிக் கொடுத்து வந்துள்ளார். அடுத்த 10 நாளில் மறுபடியும் மது அருந்திவிட்டு, உறவினர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மனைவியை ஈஸ்வரன் துன்புறுத்தினாராம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் பாண்டியம்மாள் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீஸார் ஈஸ்வரன், அவரது தந்தை கோ.கோட்டமலை (50). இவரது மனைவி முத்தாலம்மாள் (48), கோட்டமலையின் மகன் முனியாண்டி (32), மகள் கோவிந்தம்மாள் (30) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement