முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோஷ்டி மோதல்: மூவர் காயம்; 11 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் மூவர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Updated On : 14 அக்டோபர், 2013 at 10:47 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் மூவர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், சீனியாபுரம் தெருவைச் சேர்ந்தவர் மோட்ச மரியான் மகன் சின்னப்பராஜ் (28). இவரும் இவரது அண்ணன் செபஸ்தியானும் சீனியாபுரம் தெற்குத் தெருவில் உள்ள மேரி என்பவர் வீட்டின் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார்கள். அவ்வழியே வந்த லூ.சின்னப்பன் (50) என்பவர், சின்னப்பராஜூடம் ஏன் தெருவில் நின்று பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளார். இதில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வீட்டிற்குச் சென்று சின்னப்பன் அரிவாளை எடுத்து வந்து சின்னப்பராஜை வெட்டியுள்ளார். மேலும் சின்னப்பனுடன் வந்த செ.சவரிமுத்து (32), இவரது மனைவி மரிய ஜெபமாலை (29), பாலகிருஷ்ணன் மனைவி மேரி (45), வின்சென்ட் மனைவி வேளாங்கன்னி (40), ஜஸ்டின் மாணிக்கம் மனைவி கலாமேரி (30) ஆகியோர் சேர்ந்து செபஸ்தியானை கையாலும் கம்பாலும் தாக்கியுள்ளார்கள். இதில் காயமுற்ற சின்னப்பராஜ் மற்றும் அவரது அண்ணன் செபஸ்தியான் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சின்னப்பராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

Advertisement

மற்றொரு புகார்: சீனியாபுரம், செல்வராஜ் மகன் சவரிமுத்து (32) என்பவர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்து புகாரில், மோட்ச மரியான் மகன் செபஸ்தியான், சி.பிரான்சிஸ் சேவியர் (37), மோ.சின்னப்பராஜ் (30) ஆகியோர் தனது தாய் மாமாவுடன் தகராறு செய்து கொண்டிருந்ததாயும், அதனைப் பார்த்த சவரிமுத்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு மூவரும் சேர்ந்து இரும்புக் கம்பியால் சவரிமுத்துவை தாக்கியதில் காயமுற்றதாய் குறிப்பிட்டுள்ளார். மேலும் செபஸ்தியான் மனைவி கிரேஷா (36), சின்னப்பராஜ் மனைவி கிரேஷா மேரி (26), சின்னப்பன் மனைவி மரிய சின்னம்மாள் (58) ஆகியோர் சேர்ந்து கல்லால் தனைத் தாக்கியதாயும் சவரிமுத்து புகார் செய்துள்ளார்.

இதன் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், செபஸ்தியான் தவிர்த்த 5 பேரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.