தற்போதைய செய்திகள்

விருதுநகரில் மகர்நோம்பு திருவிழா

விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நடைபெற்று வருகிறது. அதேபோல், இந்த விழா திங்களகிழமை நடைபெற்றது.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மகர்நோம்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு சமுதாயத்தினர் ரெட்டை வால் புலிவேஷம் அணிந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர்.

விருதுநகர் ஸ்ரீசொக்கநாதர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நடைபெற்று வருகிறது. அதேபோல், இந்த விழா திங்களகிழமை நடைபெற்றது. இதையொட்டி திருக்கோயில் வளாகத்தில் இருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மதுரை சாலையில் மண்டபத்தின் முன்பு மண்டகப்படி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீசொக்கநாதர் அம்பு விட்டு அரக்கனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து, ஸ்ரீசொக்கநாதரை வரவேற்கும் வகையிலும், எதிர்சேவை அளிக்கும் வகையிலும் ஒவ்வொரு சமுதாயத்தினரும் ரெட்டைவால் புலிவேஷம் போட்டு வரவேற்பார்கள். இதி்ல், விருதுநகரைச் சேர்ந்த ஒவ்வொரு சமுதாயத்தினரும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்திற்குள் ரெட்டைவால் புலிவேஷத்துடன் மதுரை சாலை, பழைய பஸ்நிலையம், தேசபந்து மைதானம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து ஊர்வலத்தை முடித்துக் கொள்வார்கள்.

இந்த மகர்நோன்பு விழாவிற்காக ரெட்டைவால் புலிவேஷம் போட்டு வருவதால்  ஏற்படும் பிரச்னையை தடுப்பதற்காகவே விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில் டி.எஸ்.பி.சுலைமான் முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT