கடையநல்லூர் அருகே பைக்குகள் மோதல்: 2 பேர் பலி
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே நேற்று (செவ்வாய்) இரவு 11.30 மணி அளவில் மேலக் கடையநல்லூர் ஐஐடி நகரைச் சேர்ந்த ஐயப்பன் (23), காளி (30) இருவரும் பைக்கில் சென்றனர். ஐயப்பனுக்கு காளி அத்தான் முறை உறவு. அவர்கள் இருவரும்,
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே நேற்று (செவ்வாய்) இரவு 11.30 மணி அளவில் மேலக் கடையநல்லூர் ஐஐடி நகரைச் சேர்ந்த ஐயப்பன் (23), காளி (30) இருவரும் பைக்கில் சென்றனர். ஐயப்பனுக்கு காளி அத்தான் முறை உறவு. அவர்கள் இருவரும், கடையநல்லூர் திரையரங்கு அருகே வந்தபோது, உசிலம்பட்டியைச் சேர்ந்த கண்ணன், மற்றும் அவருடைய நண்பரான மதுரை பேரையூரைச் சேர்ந்த கண்ணன் இருவரும் எதிரே ஒரு பைக்கில் வந்தனர். இவர்கள் இருவரும் கடையநல்லூரில் உள்ள நெல் அறுவை மில்லில் பணி புரிகிறார்கள். திரையரங்கு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக இரு பைக்குகளும் வேகமாக மோதின. இதில் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காளி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மற்ற இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.