தொழில்நுட்பக் கோளாறு : ரோந்து ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்
ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதன்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதன்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ராமேஸ்வரம் அடுத்த ராமநாதபுரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலுக்கு பயங்கரவாத மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று காலை பாக் ஜலசந்தி தலைமன்னார் கடல் பகுதியில் ரோந்து பணிக்கு சென்ற ஐஎன் 481 ரக ஹெலிகாப்டரில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, தனுஷ்கோடி அருகே அரிச்சல் முனையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிருஷ்டவசமாக ஹெலிகாப்டரின் விமானி, துணை விமானி உட்பட 3 பேர் உயிர் தப்பினர். உடனடியாக உச்சிப்புளியில் உள்ள கடற்படை முகாமுக்கு தகவல் தெரிவக்கப்பட்டு பொறியாளர்கள் விரைந்து வந்து ஹெலிகாப்டரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Advertisement