வாகன சோதனையில் ஈடுபட்ட ஆர்டிஓ மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி
செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கராஜ் உள்ளிட்ட அலுவலர் செவ்வாய்கிழமை ஆத்தூர் அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் வாகன சோதனையில்
வில்லியம்பாக்கம் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் மீது லாரி ஏற்ற கொல்ல முயற்சி செய்த மூவர் மீது ஒரகடம் போலீஸôர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கராஜ் உள்ளிட்ட அலுவலர் செவ்வாய்கிழமை ஆத்தூர் அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ஆத்தூர் பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த மணல் லாரியை வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கராஜ் மடக்கி பிடிக்க முயன்றுள்ளார். இதையடுத்து லாரியின் டிரைவர் தங்கராஜ் மீது லாரியை ஏற்றி கொல்ல முயற்ச்சி செய்துவிட்டு லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து தங்கராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் நிற்காமல் சென்ற லாரியை துரத்தியுள்ளனர். இதையடுத்து லாரியின் டிரைவர் அவர்களிடம் இருந்து தப்புவதற்காக ஆத்தூர் பகுதியில் இருந்து ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு சாலையில் லாரியை திருப்பியுள்ளார். இந்நிலையில் லாரி வடக்குப்பட்டு பகுதியில் வரும் போது சாலையில் கவிழ்ந்துள்ளது. இதையடுத்து லாரி டிரைவர் மற்றும் வாரியில் இருந்து மற்ற இருவர் ஆகியோர் லாரியில் இருந்து குதித்து தப்பியோடியுள்ளனர்.
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் தங்கராஜ் ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஒரகடம் போலீஸôர் கவிழ்ந்த மணல் லாரியை பறிமுதல் செய்ததோடு, லாரி டிரைவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.