தற்போதைய செய்திகள்

விருதுநகரில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்

விருதுநகர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் சுருக்கத் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் பங்கேற்று திருத்தம் செய்வதற்கான படிவங்களை ஆர்வத்துடன் அளித்தனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் சுருக்கத் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் பங்கேற்று திருத்தம் செய்வதற்கான படிவங்களை ஆர்வத்துடன் அளித்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 1.1.2014ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் மற்றும் சுருக்கத் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது.

விருதுநகர் பகுதியில் நகராட்சி மேல்நிலைப்பள்ளி முகாம், சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இதில், இதுவரையில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் மாற்றம் உ்ள்ளிட்டவைகளை மேற்கொள்வதற்காக வாக்குச் சாவடி அலுவலர்களிடம் பொதுமக்கள் படிவங்களை ஆர்வத்துடன் அளித்தனர். அதோடு, அரசியல் கட்சியினரும் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்களை பெயர் சேர்ப்பதற்கான படிவங்களையும் அளித்தனர்.

இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 855 வாக்குச் சாவடி மையங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நியமிக்கப்பட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள் யாவரும் மனு அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த முகாம் வருகிற 31-ம் தேதி வரையில் சுருக்க திருத்த முகாம் நடைபெற இருப்பதாக தேர்தல் பிரிவு வட்டாட்சியர் நடராஜன் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT