தருமபுரியில் 144 தடை உத்தரவை ரத்து செய்ய தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தல்
தருமபுரி புதன்கிழமை தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் வை.காவேரி
தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி புதன்கிழமை தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலர் வை.காவேரி பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அமலில் உள்ள 144 தடை உத்தரவு அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கிறது. எனவே, இந்த தடை உத்தரவை உடனடியாக மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும். மேலும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை பாமக அறிவித்துள்ளது. இதில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கிருஷ்ணகிரியில் போட்டியிட உள்ளதாகவும், தருமபுரியில் அன்புமணி போட்டியிடுவார் எனவும் தெரிகிறது. தொகுதிகளுக்கும், மக்களுக்கும் தொடர்பில்லாத இவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் மக்களவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிலைப்பாடு குறித்து அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பிறகு கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் அறிவிப்பார் என்றார் அவர்.