தற்போதைய செய்திகள்

7.2 கிலோ தங்கம் வழிப்பறி: பேருந்து ஓட்டுநர், நடத்துனரிடம் விசாரணை

கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையில் இருந்து அவரது உறவினர் துவாரகாந்த், கடை ஊழியர் நாகராஜன் ஆகியோர் திருவாரூரில் உள்ள நகைக்கடைக்கு விற்பனைக்காக

ஏ. அருள்ராஜ்

கோவை நகை வியாபாரிகளிடம் 7.2 கிலோ தங்க நகை வழிப்பறி வழக்கில் பேருந்து ஓட்டுநர், நடத்துனரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கோவையைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடையில் இருந்து அவரது உறவினர் துவாரகாந்த், கடை ஊழியர் நாகராஜன் ஆகியோர் திருவாரூரில் உள்ள நகைக்கடைக்கு விற்பனைக்காக கடந்த 20ம்தேத் 7.2 கிலோ நகை கொண்டு வந்தனர். லாலாப்பேட்டையில் அவர்கள் வந்த சொகுசு பேருந்து வந்தபோது, பேருந்தை வழிமறித்து, தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி இருவரையும் காரில் மர்ம கும்பல் கடத்திச்சென்றது. பின்னர் ஏமூர்புதூர் அருகே அவர்களை தள்ளிவிட்டு நகையுடன் கும்பல் தப்பிச்சென்றது.

இந்த வழக்கை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் உத்தரவின்பேரில் மூன்று தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்குச் சென்று விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் துவாரகாந்த், லோகநாதன் வந்த பேருந்தின் ஓட்டுநர் ரகு, நடத்துனர் கார்த்திக் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கரூர் வரவழைத்து தனிப்படையினர் விசாரித்தனர். அப்போது கொள்ளையர்கள் காக்கிச் சட்டை, பேண்ட் அணிந்து 6 பேரும் ஒரே சீருடையில் வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT