தற்போதைய செய்திகள்

திமுக பிரதிநிதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர் கைது

கரூர் வெங்கமேடு எஸ்.பி.காலனி 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் குமார்(40). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 21-ம்தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின்

ஏ. அருள்ராஜ்

கரூர் அருகே திமுக பிரதிநிதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

கரூர் வெங்கமேடு எஸ்.பி.காலனி 3-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் குமார்(40). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 21-ம்தேதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த குமாரின் 2 இருசக்கர வாகனம் மற்றும் காரின் மீது யாரோ மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதில் வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தன. இது தொடர்பாக குமார் வெங்கமேடு காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குத்தொடர்பாக மாயனூர் மேலடையில் உள்ள மாணிக்கபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் காளிதாஸ்(25) என்ற இளைஞரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். போலீஸாரின் விசாரணையில், காளிதாஸின் உறவினரின் மகள் குமாரின் மைத்துனர் கிருஷ்ணன் என்பவரின் மகளோடு கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் கிருஷ்ணன் மகளை காளிதாஸ் ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனக்கும், கிருஷ்ணனின் மகளுக்கும் திருமணம் என காளிதாஸ் ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குமார் காளிதாஸை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் 21ம்தேதி குமார் வீட்டில் காளிதாஸ் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT