முகப்பு
தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தேதி மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றப்பட்டு, நவ.8ம் தேதி தொடங்கி, 10-ம்தே தேதி வரையில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

Updated On : 24 அக்டோபர், 2013 at 5:31 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:55 PM

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றப்பட்டு, நவ.8ம் தேதி தொடங்கி, 10-ம்தே தேதி வரையில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

    இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 28,29 மற்றும் 30ம் ஆகிய தேதிகளில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்றைய நாளில் குருபூஜை உள்ளிட்ட விழாக்கள் நடைபெற இருக்கிறது. இதுபோன்ற நேரங்களில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தினால் பாதுகாப்பு கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் மறு தேதி மாற்றம் செய்யுமாறு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட நாளில் தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெற இருக்கிறது. அதில், ஒவ்வொரு போட்டியும் நடைபெறும் இடம் பின்வருமாறு: தடகளப் போட்டிகளில் வருகிற நவ.8ம் தேதி மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும்,  அருப்புக்கோட்டை ராம்ஜி விளையாட்டு அகடாமி அரங்கத்தில் அதேநாளில் இறகு பந்து போட்டியும், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் அதேநாளில் நீச்சல் போட்டியும் நடைபெறுகிறது.

Advertisement

     அதேபோல், நவ.9-ம் தேதி விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து, வளைகோல்பந்து போட்டியும் நடைபெற இருக்கிறது. மேலும், நவ.9,10 ஆகிய நாள்களில் கையுந்து பந்து, கால்பந்து, கபாடி, டென்னிஸ், மேசைபந்து உள்ளிட்ட போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் நடைபெற இருக்கிறது. இப்போட்டிகளில் 25 வயது பூர்த்தியடையாதவர்கள் பங்கேற்கலாம். அதற்கான சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும்.

    இதில், மாவட்ட அளவில் குழுப்போட்டிகள், ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1000, 2-வது பரிசாக ரூ.750ம், 3-வது பரிசாக ரூ.500 ம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறுகிறவர்கள் மண்டல அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதில், முதல் இடங்களைப் பெறுகிறவர்களை மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

     இதில், சிறப்பிடங்களை பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-வது பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவைகள் வழங்கப்பட இருக்கிறது. இப்போட்டிகளில் பங்கேற்க ஆர்முடையோர் வருகிற நவ-4ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், இது தொடர்பான விவரங்களை தொலைபேசி எண்:04562-252947 தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.