சிதம்பரத்தில் நாளை மறுநாள் தேமுதிக நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
சிதம்பரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர்கழக கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (அக்.29, செவ்வாய்க்கிழமை) தெற்குவீதி ஏ.
சிதம்பரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர்கழக கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (அக்.29, செவ்வாய்க்கிழமை) தெற்குவீதி ஏ.ஆர்.மஹால் மண்டபத்தில் நடைபெறுகிறது என மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேமுதிக மாநில துணைச் செயலாளர் பி.முருகேசன் பங்கேற்று சிறப்புரையாற்றி ஆலோசனைகளை வழங்குகிறார். எனவே கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகன், நகர, ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் சபா.சசிக்குமார் தெரிவித்துள்ளார்.