முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி விடுதியில் குரங்கு கடித்து 3 மாணவியர் காயம்

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்குள்  புகுந்த குரங்கு திங்கள்கிழமை காலை 3 மாணவியர்கள் கடித்து குதறியது. இதனால் அலமேலு உள்ளிட்ட மூன்று மாணவியர்கள் காயமுற்று அரசு

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:30 PM
பகிர்:

சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதிக்குள்  புகுந்த குரங்கு திங்கள்கிழமை காலை 3 மாணவியர்கள் கடித்து குதறியது. இதனால் அலமேலு உள்ளிட்ட மூன்று மாணவியர்கள் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். சிதம்பரம் வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் தலைமையில் வனத்துறையினர் விடுதி வளாகத்திற்கு விரைந்து சென்று கூண்டை வைத்து மாணவியர்களை கடித்த குரங்கை பிடித்தனர்.

இதே போன்று சிதம்பரம் அருகே ராதாவிளாகம் கிராமத்தில் குரங்குகள் தொல்லையால் மக்கள் அவதியுறுவதாக கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தமிழக வனத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் சிதம்பரம் வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் களப்பணியாளர்கள் கூண்டுகளுடன் சென்று ராதாவிளாகம் கிராமத்தில் முகாமிட்டு பகல் முழுவதும் காத்திருந்து 12 குரங்குகளை பிடித்து அருகாமையில் உள்ள கார்மாங்குடி காப்புக் காட்டில் கொண்டு விட்டனர். மேலும் தொடர்ந்து ராதாவிளாகம் கிராமத்தில் குரங்களை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகளுடன் முகாமிட்டு காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.