முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒரே மேடையில் மன்மோகன்-மோடி

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய்பட்டேலுடைய அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:31 PM
பகிர்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய்பட்டேலுடைய அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட்டது.

முன்னதாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங் அகமதாபாத் வந்தடைந்தார், அவரை விமான நிலையத்தில் பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதனையடுத்து நேராக விழா நடைபெறும் மேடைக்கு சென்ற இருவரும், ஒரே மேடையில் அமர்ந்துள்ளனர்.விழாவிற்கு தலைமை தாங்கி பேசிய பிரதமர் மன்மோகன்சிங்,  குஜராத் மாநிலம் நமக்கு மகாத்மா காந்தியையும், சர்தார் வல்லபாய் படேலையும் கொடுத்துள்ளது. இவர்களின் கொள்கைகளை இந்தியா பின்பற்ற வேண்டும். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.பின்னர் விழாவில் பேசிய மோடி, இந்தியாவின் முதல் பிரதமராக படேல் இருந்திருந்தால் சூழ்நிலைகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும். படேல் பிரதமராகியிருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினர் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →