முகப்பு
தற்போதைய செய்திகள்

தென்னக ரயில்வே காற்றாலை நிறுவத் திட்டம்: பொதுமேலாளர் ராகேஷ்மிஸ்ரா தகவல்

தென்னக ரயில்வே மூலம் மின்சாரம் தயாரிக்க காற்றாலை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மின் மயமாகும்  பணியினை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட தென்னக ரயில்வே

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:31 PM
பகிர்:

தென்னக ரயில்வே மூலம் மின்சாரம் தயாரிக்க காற்றாலை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மின் மயமாகும்  பணியினை செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ்மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ்மிஸ்ரா, செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி வந்தார். அவர் குடும்பத்துடன் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மின் மயமாக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, மதுரை கோட்ட மேலாளர் அஜய்காந்த்ரஸ்தோகி, திருநெல்வேலி ரயில் நிலைய மேலாளர் வி.எம். செல்லத்துரை மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அப்போது ரகேஷ்மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், திருச்செந்தூர் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளேன். மதுரை திருநெல்வேலி இடையே நடைபெற்று வரும் மின் மயமாக்கும் பணி, வரும் ஏப்ரல், மே மாதத்தில் நிறைவடையும்.திருநெல்வேலி தென்காசி இடையே கூடுதலாக ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை புனலூர் அகல ரயில்பாதைத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 300 கோடி தேவை. அப்பகுதி மலைப்பிரதேசம். மேலும் ரயில்வேத்துறை நிதி பற்றாக்குறை இருப்பதால், அத்திட்டத்தை நிறைவேற்ற 5 ஆண்டுகள் வரை ஆகலாம்.

பெங்களூரு நாகர்கோவில் இடையே எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குவது குறித்து தென்மேற்கு ரயில்வே நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரம் தூத்துக்குடி இடையே புதிய வழித்தடம் அமைக்கும் திட்டமில்லை. ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை, காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.தென்னக ரயில்வே மூலம் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உள்ளது. அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →