முகப்பு
தற்போதைய செய்திகள்

ஏற்காடு சட்டப்பேரவை இடைதேர்தல்: அதிமுகவிற்கு பிற்படுத்தப்பட்டோர் பேரவை ஆதரவு

ஏற்காடு சட்டப்பேரவை இடைதேர்தலில் அதிமுகவிற்கு ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச்செயலாளர் வீர.வன்னியராஜா தெரிவித்துள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:32 PM
பகிர்:

ஏற்காடு சட்டப்பேரவை இடைதேர்தலில் அதிமுகவிற்கு ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச்செயலாளர் வீர.வன்னியராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு தமிழகத்தில் 50 சதவீத ஒதுக்கீடு அளித்து, இன்றளவும் பெரியாரினுடைய வகுப்புவாரியான இடஒதுக்கீடு கொள்கையை தமிழக மண்ணில் தொடர்ந்து நிலை நாட்டிவரும் பெரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவையே சாரும். எனவே சென்னையில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை மாநில பொதுக்குழுவில் ஏற்காடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்து வீடு, வீடாக சென்று பிரசாகம் செய்வது என முடிவு செய்துள்ளோம் என வீர.வன்னியராஜா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.